பணி அனுபவம் வேண்டாம்.. முன்னணி ஐடி நிறுவனம் சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டெலாய்ட்டில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன் அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

டெலாய்ட் என்ற ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக் அல்லது எம்டெக் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

it jobs jobs job

அதோடு 0 - 2 ஆண்டு வரை அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு குறிப்பிட்ட திறமைகள் என்பது இருக்க வேண்டும்.

அதன்படி Data Structures, algorithms மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் என்பது இருக்க வேண்டும். அதேபோல் பைத்தான், ஜாவா ஸ்கிரிப்ட்/டைப்ஸ்கிரிப்ட் மற்றும் எஸ்க்யூஎல், ES6 TypeScript ஆகியவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் reusable, testable, efficient code எழுத தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் RDBMS/NoSQL Databases ஸ்டேன்டடில் அப்ளிகேஷன் டெவலப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். செக்யூரிட்டி மற்றும் டேட்டா பாதுகாப்பு குறித்தவற்றை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் React.js, ode.js, FastAPI frameworks உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதேபோல் Cloud பிளாட்பார்ம்ஸ்களான AWS/Azure/GCP உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ரைட்டிங் யூனிட் டெஸ்ட்டில் Jest, Mocha மற்றும் PyTest frameworks-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Grile methodology தெரிந்து வைத்திருப்பதோடு, புதியவற்றை கற்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள டெலாய்ட் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 21ம் தேதி வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான இறுதி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்பதால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+