10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்! மத்திய அரசு வேலை.. அதுவும் சென்னையிலேயே.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குனரகத்தில் காலியாக உள்ள 487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் வரும் சுகாதார சேவைகள் இயக்குனரகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர், டெக்னிஷியன், லேப் அசிஸ்டண்ட், சமையல் உதவியாளர், டெய்லர் உள்ளிட்ட பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: உதவியாளர், டெக்னிஷியன், லேப் அசிஸ்டண்ட், சமையல் உதவியாளர், டெய்லர், சூப்பர்வைசர் மெயிண்டன்ஸ், அக்கவுண்டண்ட், அஸ்சிஸ்ட்ண்ட் அக்கவுண்ட் ஆபிசர், லேப்ரட்டர் அட்டண்ட், பாராமெடிக்கல், ரேடியாகிராபர், நர்சிங் ஆபிசர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், லைப்ரரி கிளர்க், எக்ஸ்ரே டெக்னிஷியன், பிரஸ்சிங் மேன், அசிஸ்டண்ட் அக்கவுன்ட்ஸ் ஆஃபிசர், ஸ்டாப் கார் டிரைவர் என 64 வகையான பணிகளுக்கு 487 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இது பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை துறைசார்ந்த கல்வி தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு முடித்தவர்களுக்கான பணிகள் உள்ளன. வயது வரம்பை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிகட்ச வயது வரம்பு 40 வரை உள்ளது.
தேர்வு முறை : கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும். மும்பை, பெங்களூர், சென்னை, லக்னோ, ராஞ்சி, சண்டிகார், கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: விண்ணப்பிக்க கடைசி தேதி 30-11-2023 ஆகும். சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்படும். 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு அதிகபட்சமாக 56,900 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://www.tamilanguide.in/wp-content/uploads/2023/11/DGHS-Official-Notification-PDF.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications