வேலை தேடுறீங்களா? ஜாக்பாட்! குதிரைக்கு முடிவெட்டுனா தினமும் ரூ 1.2 லட்சம் சம்பளம்!
துபாய்: குதிரையை பராமரித்து அதன் முடிகளை வெட்டி அழகாக பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ 1.2 லட்சம் வரை ஊதியம் வழங்குகிறது வளைகுடா நாடுகள்.
வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆட்சி வரும் போதெல்லாம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது இதுதான். எத்தனையோ நிறுவனங்களில் முதலீடு செய்தாலும் அந்தந்த நாடுகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நிறைய பேர் வேலைவாய்ப்பில்லாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். சிலர் படிப்புக்கு ஏற்ற வேலையை செய்கிறார்கள். சிலர் கிடைத்த வேலையை செய்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு வேலைக்காக செல்கிறார்கள்.
அந்த வகையில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகளில் குதிரைகளுக்கு முடிவெட்டுவதற்கெனே தனியாக கலைஞர்கள் இருப்பார்கள். இவர் பிரொபஷனல் ஹேட் டிரிம்மர்கள். ஒரு ஹேர் கட்டுக்கு ரூ 12 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிரது.
குதிரைகளுக்கு தேவையற்ற முடிகளை கட் செய்து அவற்றை அழகாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அரபு நாடுகளில் இந்த வேலையை செய்ய நிறைய பேர் முன் வரவில்லை. இதனால் குதிரைகளுக்கு முடிவெட்டுவோருக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முடிவெட்ட 150 டாலர்களை சில நாடுகள் கட்டணமாக கொடுக்கின்றன.
இதன் மூலம் நன்கு தேர்ச்சி பெற்ற முடிவெட்டும் கலைஞர் 10 குதிரைகளுக்கு முடிவெட்டுவதன் மூலம் ரூ 1.2 லட்சம் வரை ஒரு நாளைக்கு ஊதியமாக பெறலாம். பல நாடுகளில் குதிரைகளை பேணி பாதுகாத்து நன்கு வளர்ப்பதை பெருமையாக கருதுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகள் எல்லமாம் அவ்வப்போது குதிரை கண்காட்சிகளை நடத்துகின்றன. அந்த நிகழ்வுகளில் குதிரைகளின் அழகும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக அதன் கழுத்து, வால் பகுதியில் உள்ள முடிகளை விதவிதமாக டிரிம் செய்து அதை அழகாக்க வேண்டும். பார்ப்போரை கவர்ந்திருக்க வேண்டும். இதன் மூலம்தான் குதிரைகளுக்கு முடிவெட்டுவோர் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications