இந்திய விமானப்படையில் அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பிக்க ஆசையா.. உடனே பாருங்க
சிவகங்கை: இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுள்ள இளைஞர்கள் இந்திய விமானப்படையில் அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக பிப்ரவரி 6-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு, விண்ணப்பிப்பவர்கள் 02.01.2004 முதல் 02.07.2007-க்குள் பிறந்திருக்க வேண்டும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதள மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04575-245225 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை கடந்த 2022ம் ஆண்டு அறிவித்திருந்தது. 4 வருடம் பணி முடித்த பின்னர் ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

பணியின் பெயர் : அக்னி வீரர்
பணி தரும் நிறுவனம்: இந்திய விமானப்படை
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு
பணிக்கான வயது வரம்பு: 17½ - 21 வயது வரை
பணிக்காலம்: 4 ஆண்டுகள்
காலிப் பணியிடங்கள்: 45,000 முதல் 50,000 (ஆண்டுதோறும்)
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
சம்பளம்: ரூ. 30,000-ரூ. 40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 6
அக்னிவீரர்களுக்கான கல்வித் தகுதி, பல்வேறு பிரிவுகளில் சேர்வதற்கான தகுதி நடைமுறை இருக்கிறது. ஜெனரல் டூட்டி (ஜிடி) சிப்பாய்க்குள் நுழைவதற்கு, கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications