கைநிறைய சம்பளம்.. தேர்வு இன்றி இசிஐஎல் நிறுவனத்தில் அசத்தலான வேலை.. 1100 காலியிடங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1100 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

 ECIL recruitment 2024 for 1100 post including Junior Technician

அதில் ஒன்று தான் இசிஐஎல் எனும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: இசிஐஎல் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள 1100 ஜுனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. துறை வாரியாக பார்த்தால் ஜுனியர் டெக்னீசியன் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பிரிவில் 275 பேர், எலக்ட்ரிசீயன் பணிக்கு 275 பேர், பிட்டர் (Fitter) பணிக்கு 550 பேர் என மொத்தம் 1,100 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 16.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்பட உள்ளது. அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி - மாதசம்பளம்: இந்த பணிக்கு ஐடிஐ-யில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், பிட்டர் உள்ளிட்ட படிப்புகளை படித்து முடித்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22,560 சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி மாதம் 16ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மெரிட், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+