மாதஊதியம் ரூ.18000 டூ ரூ.2.09 லட்சம்! முதல்வர் டூ அக்கவுண்டென்ட் வரை.. ஏகலைவா பள்ளியில் 4,062 வேலை!
சென்னை: மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளியில் முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அக்கவுண்டென்ட், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டென்ட் என மொத்தம் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக அதிகபட்சமாக ரூ.2.09 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளி (EKLAVYA MODEL RESIDENTIAL SCHOOL or EMRS) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளியில் மொத்தம் 4,062 பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வர் பணிக்கு 303 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Teachers or PGTs) பணிக்கு 2,266 பேர், அக்கவுண்டன்ட்(Accountant) பணிக்கு 361 பேர், ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant) பணிக்கு 759 பேர், லேப் அட்டென்டன்ட் (Lab Attendant) பணிக்கு 373 பேர் என மொத்தம் 4,062 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
12ம் வகுப்பு: ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: முதல்வர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்கவுண்டிங், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு.
மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2.09 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதன்படி முதல்வர் பணிக்கு ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
மாதஊதியம்: அக்கவுண்டென்ட் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையும், ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், லேப் அட்டென்டென்ட் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ56,900 வரையும் சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: முதல்வர் பணிக்கு ரூ.2000, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.1,500, பிற பணிகளுக்கு ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பம் செய்வது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் emrs.tribal.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஓஎம்ஆர் சீட் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டங்கள் emrs.tribal.gov.in இணையதளத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு எண்: ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 - 22240112 என்ற தொலைபேசி எண்ணை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால் [email protected] இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
முதல்வர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
பிற பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications