தஞ்சாவூர் சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு.. எழுத்து தேர்வு இல்லை.. நேரடியாக சேர சூப்பர் வாய்ப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள 22 தற்காலிக பணியிடங்களுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் District Programme Manager, Data Assistant, Dispenser, MPHW, Security Guard உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 22 பேர் சேர்க்கப்பட உள்ளனர். ஒவ்வொன்றுக்கும் கல்வி தகுதி வேறுபாடு உள்ளது. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.12.2023க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலை தரும் நிறுவனம் : தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கம்
வேலை வகை: அரசு பணி என்றாலும் ஒப்பந்த வேலை (தற்காலிக வேலை)
காலிபணியிடங்கள்: 22
காலிபணியிடங்கள் விவரம்:
பணியின் பெயர்: மாவட்ட திட்டமேனேஜர் (District Programme Manager))
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1
என்ன படித்திருக்க வேண்டும் : BAMS/ BUMS/ BHMS/ BSMS/ BNYS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட திட்டமேனேஜர் சம்பளம்: ரூ. 30,000
பணியின் பெயர்: டேட்டா உதவியாளர் Data Assistant
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1
என்ன படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: Graduation in Computer Applicaion / IT/ Business Administration / B.Tech (C.S) or (L.T) / BCA /BBA/BSC-IT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
டேட்டா உதவியாளர் சம்பளம்: ரூ. 15,000
பணியின் பெயர்: Dispenser
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 9
கல்வித் தகுதி : Siddha -Pharmacist படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Dispenser சம்பளம்: தினமும் ரூ. 750
பணியின் பெயர்: MPHW
காலியிடங்களின் எண்ணிக்கை : 9
MPHW படிப்புக்கு கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் எவ்வளவு : தினசரி ரூ. 300
பணியின் பெயர்: காவலாளி ((Security Guard)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை டவுன்லோடு செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : செயற் செயலாளர், மாவட்ட நலச் சங்கம் மற்றும் துணை இயக்குனர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் - 61300
விண்ணப்பிப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 15.12.2023. மேலும் விவரங்களை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.












Click it and Unblock the Notifications