17,710 காலியிடம்.. 10ம் வகுப்பு, டிகிரி போதும்.. ரூ.1.41 லட்சம் வரை மாதஊதியம்.. அழைக்கும் இஎஸ்ஐசி
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள 17,710 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணியை பெற முடியும்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் இஎஸ்ஐசி எனும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 5 பிரிவுகளில் காலியாக உள்ள வெவ்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:
காலியிடங்கள்: இஎஸ்ஐசியில் மொத்தம் 17,710 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக பார்த்தால் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 3,341 பேர், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 1,923 பேர், அப்பர் டிவிஷன் கிளர்க்/அப்பர் டிவிஷன் கிளர்க் கேஷியர் பணிக்கு 6,435 பேர், ஹெட் கிளர்க்/அசிஸ்டென்ட் பணிக்கு 3,415 பேர், சோஷியல் செக்யூரிட்டி ஆபிசர்/மேனேஜர் கிரேட் II/சூப்பிரண்ட் பணிக்கு 2,596 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்களும், அப்பர் டிவிஷன் கிளர்க்/அப்பர் டிவிஷன் கிளர்க் கேஷியர் மற்றும் சோஷியல் செக்யூரிட்டி ஆபிசர்/மேனேஜர் கிரேட் II/சூப்பிரண்ட் பணிக்கு பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஹெட் கிளர்க்/அசிஸ்டென்ட், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்காகன கல்விதகுதி விபரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.
மாத சம்பளம்: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரையும், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு ரூ.19,900-ரூ.63,200 வரையும், அப்பர் டிவிஷன் கிளர்க்/அப்பர் டிவிஷன் கிளர்க் கேஷியர் பணிக்கு ரூ.25,500-ரூ.81,100 வரையும் சம்பளம் வழங்கப்படும். ஹெல்கிளர்க்/அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரையும், சோஷியல் செக்யூரிட்டி ஆபிசர்/மேனேஜர் கிரேட் II/சூப்பரண்ட் பணிக்கு ரூ.44,900 முதல் ரூ.1.42 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி வாரியாக என்றால் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள்ளும், , அப்பர் டிவிஷன் கிளர்க்/அப்பர் டிவிஷன் கிளர்க் கேஷியர் பணிக்கு 18 வயது முதல் 27 வயதுக்குள்ளும், சோஷியல் செக்யூரிட்டி ஆபிசர்/மேனேஜர் கிரேட் II/சூப்பிரண்ட், லோவர் டிவிஷன் கிளர்க், ஹெல்கிளர்க்/அசிஸ்டென்ட் பணிக்கு அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் esic.nic.in இணையதளம் மூலம் நவம்பர் மாதம் 13ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here


Click it and Unblock the Notifications
