"பயிற்சி + வேலை".. சலுகைகளை அள்ளி தரும் ஐடி நிறுவனம்.. சென்னையில் பணி செய்ய சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
Ewall.. எனும் ஐடி நிறுவனம் கன்சல்டிங், ஐடி சர்வீசஸ், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சென்னை திநகரில் இயங்கி வருகிறது. தி. நகர் பசுல்லா ரோட்டின் வடக்கு பிரிவில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் Ewall நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி Ewall நிறுவனத்தில் ஜூனியர் ப்ரோகிராமர் (பிரஷர் - பைத்தான்/ஜாவா/ரியாக்ட் JS) - Junior Programmer (Fresher - Python/Java/ReactJS) உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Code ரைட்டிங் மற்றும் டெஸ்ட்டிங், டீ பக்கிங் ப்ரோகிரமஸ் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்நிலைபிரிவில் டிகிரி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்று கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். மேலும் டெவலப்மென்ட்/பர்ஷனல் ப்ரோஜெக்ட் உள்ளிட்டற்றில் இன்டன்ஷிப் அனுபவம் கொண்டிருப்பதோடு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் நாளில் இருந்தே Coding பயிற்சி என்பது வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தேர்வாகும்போது அதுபற்றிய விபரம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிறுவனம் சார்பில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. டீம் அவுட்டிங், வாரந்தோறும் ஃபன் மேக் செசன்ஸ், விழா கொண்டாட்டம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. மேலும் பணியின்போது காஃபி, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Ewall நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் போதுமான நபர்கள் விண்ணப்பம் செய்யும் பட்சத்தில் விண்ணப்பம் செய்வதற்கான apply link என்பது காலவதியாகிவிடும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications