இந்திய உணவு கழகத்தில் துணை பொது மேலாளர் பதவி.. ஆன்லைன் ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய உணவு கழகத்தில்(FCI) துணை பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பொதுத் துறை நிறுவனமான இந்திய உணவு கழகத்தில்(FCI) துணை பொது மேலாளர்(Assistant General Manager) மருத்துவ அதிகாரி(Medical Officer) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

FCI AGM Admit Card out on fci.gov.in

31.03.2021--க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு ஜூலை 17-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துணை பொது மேலாளர்(Assistant General Manager) பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால்டிக்கெட்( Admit Card) https://fci.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்(download) செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை பொது மேலாளர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பது பற்றி கீழே காண்போம்.

* முதலில் FCI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://fci.gov.in/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்

* முகப்புப்பக்கத்தில்(Home page) தற்போதைய ஆட்சேர்ப்பு( Current Recruitment) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

* CATEGORY-I க்கான CURRENT RECRUITMENT" என்பதைக் கிளிக் செய்யவும்

* புதிய பக்கத்தில், To download Call Letter for Online Recruitment Examination of Category-I (Click Here)" எனக்கூறும் இணைப்பை கிளிக் செய்யவும்.

* பின்பு அதில் உங்களுடைய பதிவு எண் / ரோல் எண்(Registration Number/Roll Number) மற்றும் கடவுச் சொல்லை (Password) குறிப்பிட்டு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+