"அனுபவம் வேண்டாம்.". டிகிரி மட்டுமே போதும்.. பிரபல நிறுவனம் தரும் ஐடி வேலை.. சென்னையில் பணி
சென்னை: பிரபல நிறுவனத்தில் ஐடி பிரிவில் அசோசியேட் இன்ஜினியர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஃப்ளக்ஸ் (Flex).. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் முழுப்பெயர் ஃப்ளக்ஸ்ரானிக்ஸ் (Flextronics). இந்த நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஃப்ளக்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி ஃப்ளக்ஸ் நிறுவனத்தில் அசோசியேட் இன்ஜினியர் -ஐடி (Associate Engineer - IT) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்து ஐடி பிரிவில் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
எச்ஆர் சாப்ட்வேரில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஜாவா (Java), ஜே2இஇ (J2EE), Xpath,XSLT பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.வெப் சர்வீசஸ் SOAP, WSDL உள்ளிட்டவை பற்றிய அறிவை பெற்றிருக்கவேண்டும். டிசைன், டெவலப்மென்ட் மற்றும் Web- Based ஐடி அப்ளிகேஷன் இம்ப்ளிமென்டேஷன் தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறமை மற்றும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் Flex நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஃப்ளக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications