"ஆண்டு சம்பளம் ரூ.32.57 லட்சம்".. இருந்த இடத்தில் இருந்தே வேலை! Flipkart நிறுவனம் தரும் சூப்பர் பணி
சென்னை: பிளிப்கார்ட் நிறுவனத்தில் 3 வகையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆண்டுக்கு ரூ.32.57 லட்சம் ஆண்டு சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
பிளிப்கார்ட் (Flipkart).. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இ-காமர்ஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் முதலில் ஆன்லைனில் புத்தகம் விற்பனையை தொடங்கியது.

அதன்பிறகு படிப்படியாக இந்த நிறுவனம் பிற ஆன்லைன் சேவைகளையும் தொடங்கியது. அதன்படி பொதுமக்களுக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், ஆடைகள் உள்பட பல பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதாவது பிளிப்கார்ட் நிறுவனத்தில் 2024 Batch - Off Campus இன்டர்வியூ நடைபெற உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
பிளிப்கார்ட் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் (SDE), யூஐ (UI), டேட்டா இன்ஜினியர் (Data Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பிற பிரிவில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யும் வசதியும், 2024ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்வதற்கான ஆப்ஷன் உள்ளது. இதனால் மற்றவர்களும் விருப்பம் இருந்தால் விண்ணப்பம் செய்து பார்க்கலாம். ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால் பணிக்கு தேர்வாகலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.32.57 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்யலாம். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications