அனுபவம் வேண்டாம்.. சென்னை ஐடி நிறுவனத்தில் 2 பிரிவுகளில் காலியிடங்கள்.. கைநிறைய சம்பளம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் 2 பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகள் பற்றி விவரம் மற்றும் வழங்கப்படும் சம்பளம் பற்றி இங்கு பார்க்கலாம்.
சென்னையில் Flysync Technologies என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சாப்ட்வேர் டிரெய்னி மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 0 முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுவம் இல்லாதவர்களும் கூட விண்ணப்பம் செய்யலாம்.
அந்த வகையில் இந்த பணிக்கு React மற்றும் Node (Not general JavaScript) அனுபவம் அல்லது அதில் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Fresher-களாக இருப்பின் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். 6 மாதத்துக்கு பிறகு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதேபோல் ஓராண்டுக்கு குறைவான அனுபவம் கொண்டவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருப்பின் அவர்களுக்கு ரூ.15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பளமாக வழங்கப்படும். இந்த சம்பளம் திறமை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள பம்மல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளது. இது On Site வகை பணியாகும். இதனால் அனைத்து ஊழியர்களும் அலுவலகம் சென்று தான் பணியாற்ற வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications