டிஎன்பிஎஸ்சியே கிரேட் நியூஸ் சொல்ல போகுது.. குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வர்களுக்கு குஷியான தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மை தேர்வு எழுதியோருக்கு குட்நியூஸ் வந்திருக்கிறது. தேர்வு முடிகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை தேர்வு செய்கிறது. அரசு பணியில் சேர பல லட்சம் இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி போதிய அளவில் பணியாளர்களை தேர்வு செய்வது குறித்து முறையான அறிவிப்புகளை வெளியிடாமல் இருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்பாக குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகியவற்றில் வரும் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், முடிவு வெளியிடப்படாமலேயே இருக்கிறது.
இதனிடையே தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த வேலையினை ராஜினாமா செய்துவிட்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து மாதக் கணக்கில் போட்டித் தேர்விற்கான பயிற்சியை இளைஞர்கள் மேற்கொண்டு தேர்வை எழுதி காத்திருக்கும் தேர்வர்கள் எப்போது தான் தேர்வு முடிவு வெளியாகும் என்ற ஏக்கத்தில் காத்துக்கிடக்கும் நிலைதான் இருக்கிறது.
இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தில் தலைவர் உள்பட மொத்தம் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்று வெறும் 4 பேர் மட்டுமே இருக்கிறார்கள். மீதி பத்து இடங்கள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பொறுப்பை வகிக்க கூடியவர் வெகு விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இது மட்டுமல்லாமல், பணியாளர் பற்றாக்குறையும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே, 2021 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்ற குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் குரூப் 2 பிரதான போட்டித் தேர்வுக்கான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாததற்கும் ஆட்கள் பற்றாக்குறையே காரணம் என்றும் புகார் எழுந்துள்ளது. மேலும் அக்டோபர் மாதமே வெளியிடப்பட வேண்டிய இந்த ஆண்டிற்கான குரூப் 4 அறிவிக்கை இன்னமும் வெளியிடப்படாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுபற்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை..
இதனிடேய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் பேட்டி அளித்த போது, தேர்வு எழுதியவர்களின் மதிப்பீட்டு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும். டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் முதல்-அமைச்சரால் வழங்கப்படும் என்றும் கூறினார். ஆனால் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல், டிசம்பர் மாதம் ஆரம்பித்து 2-வது வாரத்தையும் கடந்த நிலையில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியாகவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்கையில், தேர்வு முடிவு விரைவில் வெளியாகும்' என்று கூறினார். மேலும், தேர்வு முடிவு தாமதத்துக்கான காரணத்தை டி.என்.பி.எஸ்.சி. அறிவிக்கும் என்று கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications