கோவை கலெக்டர் பவன்குமார் குரூப்-4 தேர்வு எழுத போகும் இளைஞர்களுக்கு சொன்ன குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை துடியலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறும். இந்த பயிற்சி மையத்தில் இலவச வைபை வசதிகள், அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் உள்ளிட்ட குரூப்-4 பதவிகளில் 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான 2025-ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

Good news from Coimbatore Collector Pawan Kumar for the youth who are going to write Group-4 exam

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 215 காலிப்பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன. 2025-ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வுக்கு தேர்வர்கள் அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். www.tnpscexams.in என்ற இணையதளத்தில் மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மே மாதம் 29-ந்தேதி முதல் 31ம் தேதி வரை 3 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. குரூப்-4 தேர்வு வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற போகிறது.

குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) 2022-ம் ஆண்டு அறிக்கையில் 3 நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024-ம் அறிக்கையில் 2 நிதியாண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் என மொத்தம் 5 நிதியாண்டுகளுக்கு 17 ஆயிரத்து 799 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. இதன்படி ஒரு ஆண்டில் சராசரியாக 3 ஆயிரத்து 560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டு கூடுதல் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள். தேர்வு எழுதுவோருக்காக சிறப்பு பயிற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.

கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான 3,935 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உள்ள தகுதி வாய்ந்த மனுதாரர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக வருகிற 24-ந் தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை துடியலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறும். இந்த பயிற்சி மையத்தில் இலவச வைபை வசதிகள், அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவை நடத்தப்படுகிறது.

மேலும் பாட குறிப்புகளை https://tamilnadu careerservices.tn.gov.in எனும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுகலாம். அல்லது https://t.me/cbedecgc என்ற டெலிகிராமில் இணைவதன் மூலமாகவும் இலவச பயிற்சி வகுப்பு குறித்து தகவல்கள் பெற்று பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+