டிகிரி மட்டுமே போதும்.. கூகுள் நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை.. பெங்களூரிலேயே பணி நியமனம்
சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பயன்படுத்தும் சர்ச் என்ஜினாக (Search Engine) கூகுள் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பெங்களூரில் கூகுள் நிறுவனம் அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூரில் செயல்பட்டு வரும் கூகுளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் Software Engineer III, Infrastructure, Core பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு Minimum qualifications ஆக ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது அதற்கு நிகரான பிராக்டிக்கல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் புரோகிராமிங் லேங்குவேஜில் ஏதாவது ஒன்றில் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் பிரிவில் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது அட்வாண்ஸ்ட் டிகிரியில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர டேட்டா ஸ்ட்ரெக்சர்ஸ் அல் அல்கரிதமில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Preferred qualifications என்பது மாஸ்டர் டிகிரி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸில் பிஎச்டி அல்லது டெக்னிக்கல் ஃபில்ட்ஸ் பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். பில்டிங், டெவலப்பிங் இன்ஃபிராஸ்ட்ரெக்சர்ஸ் அல்லது நெட்வொர்க் அல்லது கம்ப்யூட்டர் டெக்னாலஜிஸ், ஸ்ட்டோரேஜ், ஹார்ட்வேர் ஆர்க்கிடெக்ச்சர் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் தற்போது தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications