அலுவலக உதவியாளர் பணி.. 8 ஆம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் உள்பட 18 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்ட் கிளார்க் உள்பட மொத்தம் 18 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர் (07 பணியிடங்கள்), ஜீப் டிரைவர் (06), ரெக்கார்டு கிளர்க் (01) நைட் வாட்ச்மேன் (04) என மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்படுகின்றன. கல்வி தகுதியை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஜீப் டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு மற்றும் 5 வருடத்துடன் கூடிய டிரைவிங் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். ரெக்கார்டு கிளர்க் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை பொது பிரிவினர் 18 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது 34 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700 - 50,000 / வரையும் ஜீப் டிரைவர் பணிக்கு ரூ. 19,500 - 62000 வரையும் ரெக்கார்ட் கிளர்க் பணிக்கு ரூ.15,900 - 50,400 வரையும் சம்பளமாக வழங்கப்படும். இரவு காவலர் பணிக்கு ரூ. 15,700 - 50,000 - வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? :
1. விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
5. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
6. இந்த அறிவிக்கையினை (Notification)இரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியமன அலுமருக்கு உண்டு.
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: அலுவலக வேலை நாட்களில் 06.11. 2023 பிற்பகல் 5. 45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அனுப்பட்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியரகம் ( வளர்ச்சிப்பிரிவு),
முதல்தளம்,
இராமநாதபுரம் மாவட்டம் - 623 504.
இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் https://ramanathapuram.alcin/: செய்யவும்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications