12ம் வகுப்பு படித்தால் போதும்.. கிருஷ்ணகிரி அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் நல்ல வேலை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு உதவியாளர் ( டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு) 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்காலிக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் இந்த பணிக்கு தகுதி உடையவர் தேர்வு செய்யப்பட உள்ளதால், விருப்பமும் தகுதியும் உடைய 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜனவரி 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தரும் நிறுவனம்: இளைஞர் நீதிக்குழுமம் (கிருஷ்ணகிரி மாவட்ட சமூகப்பாதுகாப்புத்துறை)
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் ( டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்)
வேலை வகை: தற்காலிக வேலை
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும். தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (Senior Grade In Tamil and English). கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன்னனுபவம் பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
வயது வரம்பு: 12.12.2023 அன்றுள்ளபடி 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் அவசியம் ஆகும்.
தொகுப்பூதியம்: மாதம் ரூ.11,916/ சம்பளம் வழங்கப்படும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: விண்ணப்பங்களை உரிய சான்றுகளை நகலுடன்- குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No. 99, 100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி 635 115. 04343- 292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.01.2024 மாலை 5.30 மணி ஆகும்.
மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் krishnagiri.nic.in இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி மாலை 5.45 மணிக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications