புதுவையில் அரசு வேலை.. 256 பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. டிகிரி முடித்திருந்தால் போதும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுவை அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் 256 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது, கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன? என்பது போன்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

புதுவை அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்... கல்வி தகுதி , வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

job jobs puducherry

பணியிடங்கள் & கல்வித்தகுதி: பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் 256 உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதுமானது.

வயது வரம்பு: உதவியாளர் பணியியிடங்களுக்கு விண்ணபிக்க விரும்புவர்களின் வயது வரம்பு 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எம்பிசி/ஒபிசி/ இபிசி/பிசிஎம்/பிடி உள்ளிட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. எஸ்.சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு.

தேர்வு முறை: எழுத்து தேர்வுகள் நடைபெறும். (டையர்1 & டையர் 2) என இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொது அறிவு, ஆங்கிலம், கணிணி பற்றிய அறிவு, ஆப்டிடியூட் உள்ளிட்டவை பற்றிய கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். போதுமான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்..

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: புதுவையை பிறப்பிடமாக கொண்டவர்கள் அல்லது 5 ஆண்டுகளுக்கு மேல் புதுவையில் வசிப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பிட சான்றிதழ் வருவாய்துறை அதிகாரியிடம் இருந்து பெற்று சமர்பிப்பது கட்டாயம்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://recruitment.py.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக கேட்கப்பட்டுள்ள விவரங்களை சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக் கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ள https://recruitment.py.gov.in/recruitment/ASST2024/RenderNotification இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்க வரும் 20.09.2024 கடைசி நாளாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+