சென்னையில் ஐடி வேலைவாய்ப்பு.. மொத்தம் 3 வகையான பணி! ஆகஸ்ட் 10 இண்டர்வியூ! ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் 3 வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆகஸ்ட் 10 இண்ட்ர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

Grethena.. எனும் நிறுவனம் சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ளது. இந்த நிறுவனம் என்பது பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான செல்போன் செயலி மற்றும் AI chatbots உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் Grethena நிறுவனத்தில் தற்போது 3 வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

இதில் முதலாவது பணியின் பெயர் JIRA Administrator(Fresher) இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான படிப்பில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் இருக்க வேண்டும். இதுதவிர Jira or Similar tools பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் Agile Methodologies-ல் பெமிலாரிட்டி இருக்க வேண்டும்.

அடுத்ததாக 2வது பணி என்பது Sales Executive. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு நல்லகம்யூனிகேசன் திறமை இருக்க வேண்டும். மேலும் சேல்ஸ் பிரிவில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கஸ்டமர் சர்வீஸ் பிரிவில் பணியாற்றி இருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் (MS office) மற்றும் சிஆர்எம் (CRM skills) திறமை கொண்டிருக்க வேண்டும்.

3வது பணி என்பது Junior HR. இந்த பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். 2 முதல் 4 ஆண்டுகள் வரை Exempt மற்றும் Non Exempt உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிகளுக்கான இன்டர்வியூ என்பது ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.

இண்டர்வியூவுக்கு செல்வோர் ஆதார் கார்டு, Resume மற்றும் கல்வி சான்றிதழ்களின் Hard Copy உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://grethena.com இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். மேலும் வாட்ஸ்அப்பில் 9790995943, 9600415443 உள்ளிட்ட எண் அல்லது [email protected] தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+