Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சப் கலெக்டர், டிஎஸ்பி ஆகலாம்.. குரூப் 1 தேர்வு: டிகிரி முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்! தேதி முடிய போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிகலாம். விண்ணப்பிக்க நாளை ஒருநாள் தான் கால அவகாசம் இருப்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டி.என்.பிஎஸ்.சி எனப்படும் தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் வருடாந்திர கால அட்டவணை வெளியிடும் டிஎன்பிஎஸ்சி, அதன்படி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் உரிய தேர்வு நடைமுறைகளின்படி நிரப்பபடுகிறது. தமிழகத்தில் அரசு வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வையே நம்பி படித்து வருகிறார்கள்.

Group 1 exam vacancies 90 posts Last date Reminder how to apply full details

கடந்த மாதம் துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்:

பணியிடங்கள் விவரம்:
துணை கலெக்டர் - 16 பணியிடம்
டிஎஸ்பி - 23
துணை ஆணையர் (வணிக வரித்துறை) - 14
கூட்டுறவு துறை துணை பதிவாளர் - 21
ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் - 14
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 1
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி - 1.

என மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை (UG) பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 21- வயது முதல் 34 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது, MBCs/DCs, BC(OBCM)s, BCMs SCs, SC(A)s, STs உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ரூ. 56,100 - 2,05,700 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க 27. 04. 2024 கடைசி நாள் ஆகும். நாளை ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.. தேர்வு முறையை பொறுத்தவரை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு வரும் 13. 07. 2024 அன்று நடைபெறும்.

தேர்வு முறை: முதன்மைத் தேர்வை பொறுத்தவரை நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஆகும். 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம் ஆகும். எடுக்க தவறினால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.

அடுத்த மூன்று தாள்களும், பொது அறிவு பகுதியாக இருக்கும். ஒவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மைத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கட்டணமாக முதல் நிலைத்தேர்வுக்கு 100 மற்றும் முதன்மை தேர்வுக்கு ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்சி(ஏ), எடி, எம்பிசி (வி), எம்பிசி, டின்சி, எம்பிசி, பிசி,பிசிஎம் மற்றும் விதவை உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு தேர்வு அறிவிப்பினை படிக்க https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+