Group 4 Exam: குரூப் 4 தேர்வு.. காத்திருந்த தேர்வர்களுக்கு ஷாக் கொடுத்த டிஎன்பிஎஸ்சி! கூடுதல் பணியிடங்கள் வருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்வர்கள் பலரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மிகவும் குறைவாக 6574 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு, 9,491 பணியிடங்களும், கடந்த 2022 ஆம் ஆண்டு 10,178 பணியிடங்களையும் நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த குரூப் 4 தேர்வு அறிவிப்பு நேற்று வெளியாகியது. இந்த தேர்வில் குறைந்தது 10 ஆயிரம் பணியிடங்களாவது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த தேர்வர்களுக்கு நேற்றைய அறிவிப்பு ஏமாற்றத்தையே கொடுத்தது.

Group 4 Exam job TNPSC Group 4 4

குரூப் 4 தேர்வர்கள் ஏமாற்றம்

கடந்த ஆண்டு வெறும் 5 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டதால் தேர்வர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது புதிய அரசு பொறுப்பேற்று இருப்பதால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக வரும் என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நேற்று வெளியான அறிவிப்பிலும் 6,574 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வரி தண்டலர், 1,572 தட்டச்சர், 404 சுருக்கெழுத்து தட்டச்சர், 60 நேர்முக எழுத்தர், 40 வனக்காவலர் மற்றும் முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் போன்ற 46 பதவிகளில் வரும் 6, 574 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

15 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள்

கடந்த ஆண்டை விட கூடுதல் பணியிடங்கள் வெளியிடப்பட்டு இருந்தாலும் குறைந்தது 10 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்ப அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த தேர்வர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. பேரூ​ராட்​சி, நகராட்​சி, மாநக​ராட்சி ஆகிய நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் டிஎன்​பிஎஸ்சி மூலம் நிரப்​பப்​படும் என அண்​மை​யில் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

எனவே காலியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தேர்வர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் இல்லை. குரூப் 4 தேர்வை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு கல்வி தொகுதி என்றாலும் முதுகலை பட்டம் முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கிறார்கள். குறைந்தது 15 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், அரசு பணிகளிலும் காலியிடங்கள் அதிமகாக இருப்பதால் கூடுதல் எண்ணிக்கயில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 6,574 என்பது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

கடந்த ஆண்டை விட சுமார் 1,200 பணியிடங்கள் அதிகம் என்றாலும் இந்த எண்ணிக்கை எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை என்பதே தேர்வர்களின் கருத்தாக உள்ளது. எனவே கூடுதல் பணியிடங்களை இதில் சேர்த்து நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே நிலவுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் குரூப் 4 தேர்வுகளில் நிரப்பப்பட்ட பணியிடங்கள்

2017-18: 9,351 காலியிடங்கள்
2018-19: 9,852 காலியிடங்கள்
2022: 10,178 காலியிடங்கள்
2024: 9,491 காலியிடங்கள்
2025: 5,307 காலியிடங்கள்

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போதும், கடந்த ஆண்டுதான் குறைந்த எண்ணிக்கையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட கொஞ்சம் கூடுதலாக நிரப்பபடுகிறதே தவிர அதற்கு முந்தைய ஆண்டுகளை போல அதிக எண்ணிக்கையில் பணியிடங்களை நிரப்பவில்லை என்பது தேர்வர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+