குரூப் 4 ரிசல்ட்! சான்றிதழ் சரிபார்ப்புக்கு எத்தனை நாட்கள் அவகாசம் வழங்கப்படும்? டிஎன்பிஸ்சி அப்டேட்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், கணினி விழித்திரை சான்றிதழ் (onscreen Certificate Verification) சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பதிவேற்றம் செய்ய எத்தனை நாட்கள் வழங்கப்படும்? என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி மொத்தம் 6,244 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி டிஎன்பிஸ்சி வெளியிட்டது.

20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடந்த எழுத்து தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிந்து 92 வேலை நாட்களுக்குள் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதுபோக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை கூடுதலாக சேர்க்கப்பட்டது.
இதன்மூலம் குரூப் 4 - ல் காலிப்பணியிடங்கள் 9 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கட் ஆப் பெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய எத்தனை நாட்கள் அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது:- தேர்வர்களுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 10 வேலை நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதால் தேர்வர்கள் அனைத்து சான்றிதழ்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக டிஎன்பிஎஸ்சி ரிசல்ட் வெளியிட்ட பிறகு வெளியிட்ட அறிக்கையில், கூறியதாவது:- தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு மெசேஜ் மற்றும் இமெயில் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது. எனவே தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அறிவறுத்தியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications