HCL ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. கோவையிலேயே பணி!
கோவை: ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள எச்சிஎல்-ல் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று எச்சிஎல் டெக்னாலசிஸ்(HCL Technologies). தமிழகத்தை பொறுத்தவரை இந்த நிறுவனம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் கோவையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது பிஎஸ்டபிள்யூ டெவலப்பர் (BSW Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் சி++, ஆர்டிஓஎஸ்-வில் அனுபவம் கொண்டிருப்பதோடு, MISRA Coding பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தெர்மல் மற்றும் எல்சிஎம் (LCM), AUTOSAR, QNX, LINUX மற்றும் ஆன்ட்ரய்டு உள்ளிட்டவை பற்றிய அறிவு மற்றும் அனுபவம் இருக்க வேண்டும்.
கோவையில் ஐடி வேலை.. Accenture நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. சீக்கிரம் தேதி முடியப்போகிறது
இதுதவிர CANalyser/CANoe, CANDiva, CANStress, CANDELA studio, Lauterbach உள்ளிட்ட டூல்ஸ் பற்றிய அறிவு இருக்க வேண்டும். பைத்தான் (Python) ஸ்கிரிப்டிங் லேங்குவேஷ், மைக்ரோ கன்ட்ரோலர்ஸ், மைக்ரோ ப்ராசசர்ஸ் பற்றி தெரிந்திருப்பதோடு, Connfiguration Mangement மற்றும் Defect Tracking Tools-ல் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Accenture ஐடி நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு.. கோவையில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு!
மேலும் AUTOMOTIVE infotainment/ADAS domain அனுபவம், ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்திருப்பதோடு, debugging skills கட்டாயம் வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் விபரம் என்பது தேர்வாகும்போது அறிவிக்கப்படும். தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம். நோட்டீஸ் பிரியட் என்பது 30 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணி அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications