‛‛ரூ.6 லட்சம் வரை சம்பளம்’’.. சென்னையில் ஜுலை 6ம் தேதி இன்டர்வியூ.. HCL நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜுலை 6ம் தேதி Walk in Drive சென்னை, நொய்டாவில் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் சார்பில் தற்போது தொடர்ந்து Walk In Drive நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.

அதாவது எச்சிஎல் நிறுவனத்தில் நொய்டா மற்றும் சென்னையில் ஜுலை 6ம் தேதி சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு Walk In Drive நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதோடு இந்த டிகிரியை 2021 முதல் 2023ம் ஆண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் JAVA Full Stack, Java Guidewire, .NET, SAP ABAP, SAPMM, SAP SD (Global Ceritifed) உள்ளிட்டவற்றில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 24 மாதம் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இன்டன்ஷிப் அனுபவம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.4.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இந்த சம்பளம் என்பது ஒவ்வொருவரின் பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னையில் பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. இதற்கான Walk In Drive நொய்டா மற்றும் சென்னையில் ஜுலை 6ம் தேதி நடைபெற உள்ளது.
Java Gudewire மற்றும் Java Full Stack ஆகியவற்றுக்கான Walk In Drive மட்டும் சென்னையில் நடைபெறும். SAP ABAP Walk In Drive நொய்டாவில் நடைபெறும். நொய்டாஎன்றால் ஏ/8/9 செக்டார் - 70, எச்சிஎல் டெக்னாலஜிஸ் நொய்டா என்ற இடத்தில் நிறுவனம் உள்ளது. சென்னை என்றால் எல்காட்- எஸ்இஇசட், டவர் 3, எச்சிஎல் டெக்னாலஜிஸ், கிரவுண்ட் ஃப்ளோர் (நியூ ரவுண்ட் கஃபே), சோழிங்கநல்லூர் 600119 என்ற முகவரியில் அலுவலகம் உள்ளது.
இன்டர்வியூ செல்ல விரும்புவோர் போட்டோவுடன் கூடிய பயோடேட்டா, 10, 12, இளங்கலை, முதுகலை படிப்புக்கான ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் மார்க் ஷீட்டுகளை எடுத்து செல்ல வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பிற பொருட்களை அலுவலகத்துக்குள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications