சென்னை + பெங்களூரில் ஐடி வேலை.. டெவலப்பர் பிரிவில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. அழைக்கும் HCL
சென்னை: சென்னை மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து டெவலப்பர் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது லினக்ஸ் மற்றும் நெட்வொர்க்கிங்கில் நிபுணத்துவம் பெற்ற சி அல்லது சி++ டெவலப்பர் (C or C++ Developer with linux and Networking expertise) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்டெக், எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு சி/சி++ நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதனை பயன்படுத்தி பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் எல் 2, எல் 3 புரோட்டோகால் மற்றும் லினக்ஸில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு அல்லது 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சி++ பயன்படுத்தி ஆப்ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங் பிரின்சிபிள் அடிப்படையில் பணியாற்ற வேண்டிருக்கும். லினக்ஸ் என்விரான்மென்ட்டில் டெவலப் மற்றம் டீபக் கோட் செய்ய வேண்டி இருக்கும்.
தவறு இன்றி திறமையாக வெல் டாக்குமென்டட் கோட் எழுத தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் நெட்வொர்க்கிங் கான்செப்ட்ஸ்/புரோட்டோகால்ஸ் (TCP/IP, Sockets, Multithreading) பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இல்லாவிட்டால் உங்களின் ரெஸ்யூமை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பிறகு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் பெங்களூர் என 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். எங்கு நியமனம் இருந்தாலும் அங்கு சென்று பணியாற்ற தயாராக இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications