டிகிரி முடித்து வேலை தேடுறீங்களா? அழைக்கும் HCL.. ஜுன் 29, 30 தேதிகளில் சோழிங்கநல்லூரில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பணிஅனுபவம் இல்லாதவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து Customer Service Representative (Healthcare Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

HCL

இது Freshers-க்கான பணியாகும். இதனால் டிகிரி முடித்து முன்அனுபவம் இல்லாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

அதன்படி விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் என்றால் அவர்கள் தங்களின் கைகளில் கடைசி செமஸ்டர் ரிசல்ட் விவரங்களை வைத்திருக்க வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்சிஏ, மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் படிப்பை முடித்தவர்கள் என்றா் விண்ணப்பம் செய் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Great In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வசிப்போருக்கு Cab வசதி உள்ளது. பெண்களுக்கு என்றால் இந்த சேவை இலவசமாகும். இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுன் 29 மற்றும் ஜுன் 30 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான இண்டர்வியூ HCL Tech, Sholinganallur ELCOT Campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+