அனுபவம் தேவையே இல்லை.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடியா இருக்கு.. ஜன 2 -3ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் வேண்டாம். பிகாம், எம்பிஏ, பிபிஏ, எம்காம் உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Customer service representative - International Voice Processபிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு அனுபவம் எதுவும் வேண்டாம். 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
அதன்படி கல்லூரியில் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸில் ஏதாவது ஒரு பிரிவில் படிப்பை முடித்தவர்களும், எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்புகளை முடித்தவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். ஆனால் இவர்கள் அனைவரும் 2025ம் ஆண்டில் படிப்பை முடித்து கடைசி செமஸ்டர் ரிசல்ட் காப்பியை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும்.
இன்ஜினியரிங் மற்றும் எம்சிஏ படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் பணி என்பது US Shift முறையில் தான் இருக்கும். இதனால் இரவு ஷிப்ட் இருக்கலாம். எனவே அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ‛பெஸ்ட் இன் இன்டஸ்ட்ரி' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவுக்கு Cab வசதி உள்ளது. பிக்அப் -டிராப் வசதி ஏற்படுத்தி தரப்படும். பெண் ஊழியர்களுக்கு இந்த சேவை இலவசமாகும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் சென்னையில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு குறித்த நாளில் HCL Tech ETA 3 Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Near AGS Cinemas, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் உள்ள அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications