ரூ.4.25 லட்சம் வரை சம்பளம்.. சென்னை - மதுரை உள்பட 9 இடங்களில் பணி.. அழைக்கும் HCL
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல்-லில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, மதுரை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.25 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.4.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து fresh graduates பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இசிஇ, இஐ, ஐஎஸ் உள்ளிட்டபிரிவுகளில் பிஇ, பிடெக், எம்எஸ்சி படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல் MCA என்றால் core engineering அல்லது technology stream பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். குறிப்பாக விண்ணப்பத்தாரர்கள் 10, பிளஸ் 2, இளநிலை, முதுநிலை படிப்புகளில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதுதவிர பணி சார்ந்த சர்ட்டிபிகேட், புராஜெக்ட்டில் பணியாற்றி இருந்தால் அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். மேலும் ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங்கில்(Selenium) டிசைனிங், ஆட்டோமேட்டட் டெஸ்ட் ஸ்கிரிப்ட், குவாலிட்டி, பெர்பாமன்ஸ் அப்ளிகேஷன் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டாட்நெட் டெவலப்பர் (Dotnet Developer), சி#, .Net பிரேம்வொர்க் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வெப் அப்ளிகேஷன் டெவலப், டெஸ்ட் மற்றும் மெயின்டெயின் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் (Java Full Stack Developer) என்றால் ஜாவா, ஸ்பிரிங்புட், ஆங்குலர்/ரியாக்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பிரண்ட் எண்ட் மற்றும் பேக் எண்ட் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். Oracle PL/SQL Developer என்றால் டேட்டாபேஸ் டெவலப்மென்ட், ரைட்டிங் ஸ்டோர்ட்ஸ் புரோசிசர், ஃபங்ஷன்ஸ் மற்றும் PL/SQL பயன்படுத்தி பெர்பாமன்ஸ் ட்ரெயினிங் தெரிந்திருக்க வேண்டும்.
மெயின்பிரேம் டெவலப்பர் (Mainframe Developer) என்றால் COBOL, JCL, and other mainframe technologies-களை பயன்படுத்தி சப்போர்ட் மற்றும் அப்ளிகேஷன் டெவலப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.25 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.4.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, மதுரை, பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா, நாக்பூர், புனே, லக்னோ, நொய்டா உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications