அனுபவம் தேவையே இல்லை.. டிகிரி முடித்தாலே போதும்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் புராசஸ் அசோசியேட் /கஸ்டமர் சர்வீஸ் ரெப்ரெஸ்சென்டேட்டிவ் (Process Associate/Customer Service Representative) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான தகுதிகள் பின்வருமாறு:
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்டமேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பை பொறுத்தமட்டில் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்களும் பங்கேற்கலாம். அரியர்ஸ் இருக்க கூடாது. மாறாக பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. ஒருவேளை அனுபவம் என்றால் ஓராண்டு எக்ஸ்பிரியன்ஸ் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அனுபவசாலிகள் இண்டர்வியூவில் பங்கேற்றால் அதற்கான அனுபவ சான்றிதழை வழங்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
ஷிப்ட் என்பது ரோட்டோஷனல் முறையில் இருக்கும் இருக்கும். இதனால் இரவு பணி செய்யவும் தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வாகனத்தில் பிக்-அப் மற்றும் டிராப் வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும்.
தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்து Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எப்போது வேண்டுமானாலம் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்ப்ம செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான நேரம், இடம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications