டிகிரி மட்டுமே போதும்! சென்னையில் இன்று - நாளை இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரி HCL அலுவலகத்தில் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இன்றும், நாளையும் இண்டர்வியூ நடைபெற உள்ளது. ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பு பற்றிய விபரங்கள் வருமாறு:

hcl-hiring-for-freshers-voice-process-role-in-sholinganallur-and-interview-to-be-held-on-today-and

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Walk In Drive for Fresher என்ற பெயரில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் Voice Process பணியில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டில் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மற்றபடி பிஇ, பிடெக் பிரிவில் இன்ஜினியரிங், எம்எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ், எம்சிஏ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.

விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பது வழங்கப்படும். பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. ஆனால் அதற்கு தனியாக கட்டணம் என்பது செலுத்த வேண்டும்.

இந்தபணிக்கான இண்டர்வியூ இன்றும், நாளையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL TECH, Sholinganallur ELCOT campus, Tower 4, Chennai-119 என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+