டிசம்பர் 6ம் தேதி இண்டர்வியூ.. சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 6ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சென்னை நாவலூரில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளது.

தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை மற்றும் மதுரையில் எச்சிஎல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான், தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு ஜாவா (Java), ஸ்பிரிங்பூட்(Springboot), மைக்ரோசர்வீசஸ் (Microservices), சிஐ/சிடி (CI/CD), பைப்லைன் (pipeline) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஜாவா டெவலப்பர் பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் 2+ ஆண்டுகள் மைக்ரோசர்வீசஸிலும், 5+ ஆண்டுகள் பேக் எண்ட் வெப் டெவலப்மென்ட்டிலும் அனுபவம் இருப்பது சிறப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் HCL Tech, ETA 1- Techno Park, Speical Econoic zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Chennai என்ற முகவரிக்கு சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம். . பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications