நாளை சோழிங்கநல்லூரில் இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலை.. சென்னையில் பணி
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (செப்டம்பர் 20) சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை சோழிங்கநல்லூர், நாவலூரிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியை விரும்புவோர் ஜாவா, ஸ்பிரிங்புட், மைக்ரோ சர்வீசஸ், ஜூனிட் (Junit), ரெஸ்ட்ஃபுல் ஏபிஐ, எஸ்க்யூஎல் உள்ளிட்டவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 20 (நாளை) காலையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் சோழிங்நல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகம் செல்ல வேண்டும். இண்டர்வியூ Face to Face முறையில் இருக்கும். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு தேவையை பொறுத்து பிற இடங்களுக்கும் மாற்றம் செய்யப்படலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். இதனால் விருப்பம் உள்ளவர்கள் நாளை நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கு பயன் பெறலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications