மதுரையில் IT வேலை ரெடியா இருக்கு.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. HCL தரும் அசத்தலான வாய்ப்பு
மதுரை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தகுதி உள்பட பிற விவரங்கள் பின்வருமாறு:
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இநத நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு அடிக்கடி ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதேவேளையில் மதுரை நிறுவனத்துக்கு அவ்வப்போது மட்டும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது மதுரை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் ( Java full stack developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Frontend, Backend உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட திறமைகளை பெற்றிருக்க வேண்டும். அதன்படி Backend பிரிவில் கோர் ஜாவா, ஜாவா 8+, Spring Framework(ஸ்பிரிங் புட், ஸ்பிரிங் எம்விசி, ஸ்பிரிங் செக்யூரிட்டி) தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் RESTful ஏபிஐ டெவலப்மென்ட் மற்றும் இன்டகிரேஷன், Hibernate/JPA, மைக்ரோசர்வீசஸ் ஆர்க்கிடெக்ட்ச்சர் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் Frontend என்றால் ஆங்குலர் அல்லது ரியாக்ட்.ஜேஎஸ் (Angular or React.js) அல்லது அதேமாதிரிரியான மாடர்ன் ஜாவா ஸ்கிரிப்ட் பிரேம்வொர்க்ஸ் தெரிந்திருக்க வேண்டும். எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ்3, ஜாவா ஸ்கிரிப்ட், டைப்ஸ்கிரிப்ட், ரெஸ்பான்சிவ் டிசைன் பிரின்சிபிள் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுக்குள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பில் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications