இன்னும் ஒருநாள் தான் இருக்கு.. சென்னை HCL-லில் வேலைவாய்ப்பு.. ஜூலை 31ல் இண்டர்வியூ.. நாவலூரில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஓடிசி கலெக்சன் (OTC Collections) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதாவது ஒருபிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மேலும் ஓடிசி கலெக்சன் ((OTC Collection), கேஷ் அப்ஸ் (Cash Apps), ஆர்டர் மேனேஜ்மென்ட் (Order Management) உள்ளிட்டவற்றில் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஓடிசி கலெக்சன் பிரிவில் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டு வரை குறிப்பிட்ட பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர நைட்ஷிப்ட் என்றாலும் பார்க்க தயாராக இருக்க வேண்டும் பணி என்பது சுழற்சி அடிப்படையில் இருக்கும் என்பதால் அனைத்து ஷிப்ட்டுகளிலும் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். வாரம் 5 நாட்கள் அலுவலகத்தில் தான் பணி இருக்கும். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னையில் ஜூலை 31ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 3- HCL Navalur Block 1, Sandhya infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu 600130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்கு செல்வோர் 2 Resume, 2 ஐடி ப்ரூப் எடுத்து செல்ல வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து ஜூலை 31ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications