HCL வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி.. செப்டம்பர் 30, அக்டோபர் 1ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு செப்டம்பர் 30 (நாளை) மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு பல நாடுகளில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs job jobs

எச்சிஎல் சார்பில் தற்போது QA Lead in BFS Domain பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஃஎப்எஸ் டொமைனில் QA ரோலில் 3 ஆண்டு பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 6 சிக்மா டூல்ஸ் மூலம் பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் ரூட் காஸ் அனலிஸிஸ் தெரிந்திருக்க வேண்டும். QMS டாக்குமென்டேஷன் தயாரித்து மெயின்டெயின் செய்ய தெரிந்திருக்க வேண்டும். பிரசென்டேஷன் திறமை இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அலுவலகத்தை சுற்றி 20 கிலோமீட்டர் தொலைவுக்கு Cab வசதி இருக்கும். வீட்டில் இருந்து பிக்அப், டிராப் சேவை உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாகும். இருப்பினும் பிரிட்டன் ஷிப்ட் (UK Shift), அமெரிக்கா ஷிப்ட் (US Shift)ல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதி, அக்டோபர் 1ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த 2 நாட்களும் மதியம் 12.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இண்டர்வியூ என்பது சென்னை நாவலூரில் நடைபெற உள்ளது. HCL ETA-1 - Villagae and Panchayat, ETA - Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Chegalpattu, Tamil nadu 603 103 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+