HCL வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 2 இடங்களில் பணி நியமனம்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் சென்னை மற்றும் நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தகுதி உள்பட பிற விபரங்கள் வருமாறு:

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன் விபரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது டெஸ்ட் இன்ஜினியர் (Test Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு முதல் 12 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Accessibility, Usability அல்லது சம்பந்தப்பபட்ட பிரிவில் 7 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ADA Compliance, WCAG Guidellines பற்றி நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும்.

ஹார்டுவேர் டிசைன் பிரின்சிபள் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதோடு Accessibility-யில் ரெலிவன்ட் சர்ட்டிபிகேஷன் (உதாரணம் CPACC, CAS) சான்று இருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோர் இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் வேலையில் சேர தயாராக இருக்க வேண்டும். பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் குறித்த விபரம் வெளியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை மற்றும் நொய்டாவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணி அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+