வீட்டில் இருந்தே வேலை.. அலுவலகம் செல்ல வேண்டாம்.. HCL நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் சார்பில் வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Work From Home பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அதன் விபரம் வருமாறு:
எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது டெஸ்ட் இன்ஜினியர் (Test Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்களுக்கு ஸ்மார்ட் மீட்டரிங் டொமைனில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் சாப்ட்வேர் டெஸ்ட்டிங் பிரிவிலும் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Rest API, Java, Python, Gherkin, Jira தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர ஏடபிள்யூஎஸ் பற்றிய அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதோடு டெஸ்ட் இன்ஜினியர் பிரிவில் குறைந்தபட்சம் 3 முதல் 7 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் அவர்கள் வேலையில் சேர தயாராக இருக்க வேண்டும்.
இது ஒரு Remote வகை வேலையாகும். இதனால் அலுவலகம் செல்லாமல் இந்தியாவில் எங்கு இருந்து வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். இருப்பினும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கான கடைசி கட்ட இண்டர்வியூவின்போது சம்பளம் குறித்த விபரம் வெளியாகும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.hcltech.com இணையதளத்தில் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications