எச்சிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ.. ரெடியா?
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (ஜூலை 2) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 3) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின் முழு விபரம் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது International Banking Process Sector பிரிவில் பல்வேறு காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். UK ஷிப்ட்டில் அலுவலகம் சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பணி வாரியாக பார்த்தால் Mortgage Operations (Asset Finance) வேலையை விரும்புவோர் அந்த பிரிவில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் UK/US Mortgage ஆபரேஷனில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Mortgage அப்ளிகேஷன்ஸ் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல் கார்ப்பரேஷன் பேங்கிங் (Commercial Loans) பணி என்றால் 2- 8 ஆண்டு கார்ப்பரேட்/கமர்சியல் பேங்கிங் பிரிவில் சீனியர் அசோசியேட் மற்றும் அனலிஸ்ட் ஆக பணியாற்றி இருக்க வேண்டும். Paymetns பிரிவு என்றால் 3-5 ஆண்டுகள் MT 103/MT202 டிரான்ஸ்பர்ஸ், CHAPS, BACS மேமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம்கொண்டிருக்க வேண்டும்.
Chargeback பிரிவு என்றால் குறைந்தபட்சம் 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சார்ஜ்பேக் அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கான மாத சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை (ஜூலை 2) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 3) நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ இந்த 2 நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 2 - HCLTech Navalur - Black 3, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, Navalur, Chennai, Tamil Nadu, 600 130 என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications