2 பிரிவுகளில் காலியிடங்கள்.. HCL-யில் நாளை - நாளை மறுநாள் இண்டர்வியூ.. டிகிரி முடித்தோருக்கு சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.

அந்த வகையில் எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது பேங்கிங் மற்றும் பைனான்ஸ் (Banking and Finance) பிரிவில் அசோசியேட்/ சீனியர் எக்ஸிக்கியூட்டிவ், குவாலிட்டி் அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் அசோசியேட்/சீனியர் எக்ஸிக்கியூட்டிவ் பணியை விரும்புவோர் இளநிலை, முதுநிலை பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் Mortage Domains-ல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் Lending Regulations பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். Onshore Clients ஆங்கிலத்தில் சரளமாக பேசிய அனுபவம் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
அதேபோல் குவாலிட்டி அனலிஸ்ட் பணியை பெற விரும்புவோர் பைனான்ஸ், காமர்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி அல்லது பட்ட மேற்படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். எம்எஸ் எக்ஸல் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஷிப்ட் டைமிங் என்பது காலை 6 மணி முதல் மாலை 4 மணி (ஆஸ்திரேலியா ஷிப்ட் டைமிங்) வரை இருக்கும்.
இந்த பணிகளுக்கான இண்டர்வியூ நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 13) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Technologies Ltd, ETA 3, No 33, Block 1, Sandhya Infocity, OMR Rajiv Gandhi Salai, Navalur, Chennai என்ற முகவரியில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications