அனுபவம் வேண்டாம்.. B.sc, B.com, BBA, BCA போதும்! சென்னை HCL-லில் செப்.,15 டூ 3 நாள் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த 2024, 2025ம் ஆண்டில் பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிசிஏ படிப்பை முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 15 (நாளை) முதல் செப்டம்பர் 17 ம் தேதி வரை 3 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it jobs job

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு தேவையான கல்வி தகுதி உள்பட பிற விவரங்கள் பின்வருமாறு: வாய்ஸ் புராசஸ் பணியை விரும்புவோர் பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை 2024, 2025ம் ஆண்டில் படித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது.

இந்த குறிப்பிட்ட பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்களும், பணி அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். அனுபவம் இல்லாதவர்கள் என்றால் ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவர்கள் அலுவலகத்தில் இருந்து Reliving/resignation Acceptance கடிதத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

US Shift முறையில் தான் பணி இருக்கும். இதனால் இரவு பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் பணி நாட்களாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்படும். அலுவலகத்தில் இருந்து பிக்அப் மற்றும் டிராப்புக்கு Cab வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை (செப்டம்பர் 15) முதல் செப்டம்பர் 17 ம் தேதி வரை சென்னையில் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் AMB 6, 8 South Phase, MTH Road, Ambattur Industrial Estate, Ambattur, Chennai 600 058 என்ற முகவரிக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+