HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையில் இன்று முதல் 3 நாள் இண்டர்வியூ.. சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனம் சார்பில் எம்ஐஎஸ் ஸ்கில்செட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 29 ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs job

எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து தற்போது எம்ஐஎஸ் ஸ்கில்செட்(MIS Skillset) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோருக்கு பணி பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 4 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பதாரர்களுக்கு 3 முக்கிய திறமை இருக்க வேண்டும். இதில் ஒன்று மைக்ரோசாப்ட் எக்ஸல். எக்ஸலில் Pivot tables, VLOOKUP, HLOOKUP, INDEX/MATCH, data validateion உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

2வது திறமை என்னவென்றால், பவர்பிஐ, 3வது திறமை விபிஏ/மேக்ரா (VBA/Macro) உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு இருக்க வேண்டும். இந்த 3 திறமை இருப்பவர்கள் மட்டுமே இண்டர்வியூவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டீமாக வொர்க் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.

இதற்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 29ம் தேதி(இன்று) முதல் ஜனவரி 31ம் தேதி வரை 3 நாட்கள் காலை 1 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies Ltd. ETA 3- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இந்த இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம் மற்றும் ஐடி ப்ரூப் வைத்திருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+