அனுபவம் தேவையில்லை.. டிகிரி போதும்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் மார்ச் 24, 25ம் தேதியில் இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணியில் முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate - Freshers பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது கஸ்டமர் சர்வீஸ் ரிப்ரெசென்டேட்டிவ் ரோலாகும். இந்த பணிக்கு 2024ம் ஆண்டில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காமர்ஸ், பைனான்ஸ் பிரிவில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதேவேளையில் பிடெக், எம்டெக் உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் என்பது வேண்டும். அதன்படி Banking Products பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். டைப்பிங் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
எம்எஸ் ஆபிஸில் Word, Excel உள்பட பிற விஷயங்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக UK Shift-ல் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பாக உடனடியாக பணியில் சேர தயாராக இருக்க வேண்டும். அதாவது இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றி வருவோர் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பணிக்கு தேர்வாகும்போது குறுகிய காலத்தில் பணியில் இணைய தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL TECH AMB 6 8, South Phasse, MTH Road, Ambattur Industrial Estate, Ambattur, Chennai - 600058 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஊழியர்களுக்கு 30 கிலோமீட்டர் சுற்றளவில் Two Ways Cabs வசதி என்பது உள்ளது. பெண் ஊழியர்களுக்கு Cab வசதி இலவசமாகும்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications