டிகிரி போதுமே.. சென்னை HCL ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு! நவம்பர் 28, 29 தேதிகளில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்தவர்களுக்கு எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

it jobs jobs job

தற்போது சென்னையில் உள்ள நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது HCL MEGA DRIVE FOR Australian Mortgage Underwriting என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு எந்த பாடப்பிரிவாக இருந்தாலும் டிகிரி அல்லது மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளும், அதிகபட்சமாக 6 ஆண்டுகளும் (அசோசியேட்/அனலிஸ்ட்/சீனியர் அனலிஸ்ட்/எம்எம்எஸ்/டீம் லீடர்) பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக Pre Underwriting, லோன் புராசசிங், Mortgage underwiritng அல்லது Post Close Underwriting in Australian Mortgage, USA & UK mortgage domain உள்ளிட்டவற்றில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் Lending regulation பற்றியநல்ல புரிதல் இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், நல்ல அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருப்பதோடு, கம்யூனிகேசன் திறமையும் இருக்க வேண்டும்.

தற்போது ஒருவர் இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றும் பட்சத்தில் அடுத்த ஒரு மாதத்தில் பணிக்கு சேர வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஷிப்ட் நேரம் என்பது காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்.

அதுமட்டுமின்றி நிறுவனத்தில் இருந்து 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் Cab வசதி என்பது இருக்கும். பிக்அப் - டிராப் செய்யப்படும். பெண் ஊழியர்களுக்கு Cab வசதி இலவசமாகும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணிக்குள் TOWER 5 - HCL Elcot Sez, Sholinganallur, Chennai, Tamil Nadu 600119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+