+2 அல்லது டிகிரி போதும்.. நாளை சென்னையில் இண்டர்வியூ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? அழைக்கும் HCL
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது நாளை (செப்டம்பர் 20) நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் கைநிறைய சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் எச்சிஎல் நிறுவனம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இன்சூரன்ஸ், பேங்கிங், சில்றை மற்றும் காப்பரேட் பேங்கிங் பிரிவுகளில் சர்வீஸ்களை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனம் உத்தர பிரதேசம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னை நாவலூர்/சோழிங்கநல்லூரியில் உள்ள நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
அதன்படி தற்போது எச்சிஎல் டெக் நிறுவனத்தில் International Voice Process for Banking Sector பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். இந்த பணிக்கு முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் விண்ணப்பம் செய்வோர் கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளஸ் 2 படிப்பை கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 முடித்தவர்கள் என்றால் அவர்களுக்கு 20 வயது கடந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். Clint-க்கு வாய்ஸ் மற்றும் இ-மெயில் மூலம் பதிலளித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூர்/சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணியை பெறும் நபர்கள் அலுவலகத்தை சுற்றி 20 கிலோமீட்டருக்குள் வசிக்க வேண்டியிருக்கும். Cab வசதி இருக்கும். வீட்டில் இருந்து பிக்அப், டிராப் சேவை உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணியாகும். இருப்பினும் பிரிட்டன் ஷிப்ட் (UK Shift) முறையில் ரோட்டேஷனல் முறையில் பணியாற்ற வேண்டியிருக்கும். மாதசம்பளமாக ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.8 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 20ம் தேதி (நாளை) நடக்கும் இண்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம். நாளை மதியம் 12.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இண்டர்வியூ என்பது சென்னை நாவலூரில் நடைபெற உள்ளது. HCL ETA-1 - Villagae and Panchayat, ETA - Techno Park, Special Economic Zone 33 Rajiv Gandhi Salai, Navallur, Chegalpattu, Tamil nadu 603 103 என்ற முகவரியில் நாளை இண்டர்வியூ நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications