பிளஸ் 2 முடித்தோருக்கு ஜாக்பாட்.. HCL தரும் சூப்பர் வேலைவாய்ப்பு, நாளை - மே 2ம் தேதி இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது நாளை (ஏப்ரல்30) மற்றும் மே 2 ஆகிய தினங்களில் சென்னை அம்பத்தூரில் நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முடித்தவர்கள் கூட இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் தற்போது International Voice Process for Banking Sector பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு கஸ்டமர் சப்போர்ட் ரோலாகும். அதாவது Proscess Associate பணியாகும். இந்த பணிக்கு குறைந்தபட்ச தகுதி என்பது பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

it jobs jobs job

0-1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதனால் அனுபவம் இல்லாமல் பிளஸ் 2 முடித்தவர்கள் கூட விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரோட்டேஷனல் ஷிப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி இருக்கும். அதோடு அலுவலகத்தில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்க வேண்டி இருக்கும். பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.

எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது நாளை (ஏப்ரல் 30) மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட தேதியில் HCL Technologies - AMb 6, South Phase, AmbatturIndustrila Estate 8, madras, Thiruallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+