B.Com போதும்.. HCL ஐடி நிறுவனத்தில் காத்திருக்கும் பணி.. சென்னையில் இன்றும் - நாளையும் இண்டர்வியூ
சென்னை: கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்தவர்களுக்கு சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இன்றும் (ஆகஸ்ட் 21) மற்றும் நாளை (ஆகஸ்ட் 22) ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
ஐடி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. ஒரு காலத்தில் இன்ஜினியரிங் படித்தவர்கள் மட்டுமே ஐடி நிறுவனங்களில் நுழைந்த நிலையில் தற்போது எந்த படிப்பை முடித்தவர்களாக இருந்தாலும் ஐடி துறையில் நுழையலாம் என்ற நிலை வந்துவிட்டது.

இந்நிலையில் தான் பிகாம் படிப்பை முடித்தவர்களுக்கு எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் -லில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Professionals பிரிவில் குவாலிட்டி (Quality), டிரெய்னர் (Trainer) மற்றும் டீம் லீட்ஸ் (Team Leads) உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு கல்லூரியில் பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் எம்எஸ் ஆபிஸ் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் மற்றும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். டேட்டா என்ட்ரியில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இன்வாய்ஸ் வெரிபிகேஷன்/வேலிடேஷன் மற்றும் ப்ராசசிங் அக்டிவிட்டிஸ் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளும், அதற்கு மேலேயும் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ரோட்டோஷனல் ஷிப்ட் தான் இருக்கும். இதனால் காலை, மதியம், இரவு என அனைத்து ஷிப்ட்டுகளிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதேபோல் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து மாதசம்பளம் நிர்ணயம் செய்ப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று (ஆகஸ்ட் 21) மற்றும் நாளை (ஆகஸ்ட் 22) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 2 தினங்களும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இதில் பங்கேற்க விரும்புவோர் ETA 1- Techno park, Special Economic Zone, 33 Rajiv Gandhi Salai,Navallur, Chengalpattu, Tamil Nadu 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அதே நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications