BE - B.Tech - MCA முடித்தவரா நீங்கள்? சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை ரெடியா இருக்கு! ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்லில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

hcl-tech-hiring-for-senior-c-developer-role-in-chennai

அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சீனியர் சி++ டெவலப்பர் (Senior C++ Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேவையான தகுதிகள் பற்றிய விவரம் வருமாறு:

சீனியர் சி++ டெவலப்பர் பணிக்கு பிஇ, பிடெக் மற்றும் எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதுதவிர விண்ணப்பம் செய்வோருக்கு c#/Winforms, WPF, XAML (Need Only windows - Based Profiles) உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் Good Debugging skill, desaktop based applications உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

டிசைன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். எஸ்டிஎல்சி உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பயன்படுத்தி விண்ணப்பம் செய்யலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+