அனுபவம் வேண்டாம்.. டிகிரி முடித்திருந்தாலே போதும்.. HCL நிறுவனத்தில் இன்றும், நாளையும் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு பிரத்யேகமான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. பணிக்கான இண்டர்வியூ சோழிங்கநல்லூரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ளது. எச்சிஎல் சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

எச்சிஎல் சார்பில் தற்போது கஸ்டமர் சப்போர்ட் அசோசியேட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது இன்று (மே 19), நாளை (மே 20) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் கடைசி செமஸ்டர் மார்க் ஷீட்டை கையில் வைத்திருக்க வேண்டும். இந்த பணி இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு பொருந்தாது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு US shifts முறையில் வேலை இருக்கும். இண்டர்வியூ என்பது இன்று மற்றும் நாளை என 2 நாட்களும் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Sholinganallur ElCOT Campus, Tower 4, Chennai - 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Great in Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசிகட்ட இண்டர்வியூவின்போது மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படும். தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணியில் சேர்வோருக்கு அலுவலகத்தில் இருந்து 30 கிமீ தொலைவிற்கு Cab வசதி வழங்கப்படும். பெண் பணியாளர்களுக்கு இது இலவசமாகும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications