HCL வேலைவாய்ப்பு.. செங்கல்பட்டில் நாளை முதல் 2 நாட்கள் இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டில் நாளை (நவம்பர் 18) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 19) என மொத்தம் 2 நாட்கள் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படு வரும் இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs job

சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் Fincrime Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு அசோசியேட்/அனலிஸ்ட் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு, அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு 2 முதல் 3 ஆண்டு வரை Due Diligence, Reviewing suspicious account activity உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் KYC, AML, CDD Principles and practices உள்ளிட்டவற்றில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் KYC Systems, டேட்டா மேனேஜ்மென்ட் டூல்ஸ் பயன்படுத்துவதில் நிபுணத்துவத்துடன் இருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருப்பதோடு, IIBF-AML/KYC அல்லது ACAMS-ல் சர்ட்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பிரிட்டன் (UK Shift) நேரப்படி நைட் ஷிப்ட்டில் பணியாற்ற வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் உடனடியாக அல்லது ஒரு மாத நோட்டீஸ் பிரியட் இடைவெளியில் பணியில் சேர வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

அதாவது HCL - ETA 1 - Village and Panchyat, ETA - Techno Park, Special Economist Zone 33 Rajiv Gandhi Salai, Navallur Taluk, Chengalpattu, Tamil Nadu 603103 என்ற முகவரியில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+